குவைத்தில் கல்வி விழிப்புணர்வு முகாம்

மே 14, 2008

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

 

சாதிக்க வைப்போம்!

கல்வி விழிப்புணர்வு முகாம்மற்றும் கருத்து பரிமாற்ற நிகழ்வு

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!

 

                பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம…

 

       நம் பிள்ளைகளுக்கு ஏற்ற கல்வி எது? 12 மற்றும் 10ம் வகுப்புக்கு பிறகு உள்ள மேற்படிப்புகள் என்ன? எதிர்கால உள்நாடு மற்றும் வெளிநாடு கல்வி பற்றிய ஓர் அலசல், என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? எப்படி படிக்கலாம்? எப்போது படிக்கலாம்? ஆகியவற்றின் விரிவான விளக்கங்கள், கல்வி உதவித் தொகை குறித்த ம(ற)றைக்கப்பட்ட உண்மைகள் போன்றவற்றை குறித்து மேலதிக விபரங்களை அறிந்து கொள்வதற்கும், அனைவரும் தெரிந்து கொள்வதற்கும், கல்வி குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்கும், சந்தேகங்களில் தெளிவு பெறுவதற்கும்…
 
       இன்ஷா அல்லாஹ் வருகின்ற 23-05-2008 வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணி முதல் மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து இரவு 9:00 மணி வரை குவைத், மன்சூரிய்யா பகுதியில் உள்ள ரிஃபாயி தீவானியா‘ (கத்ஆ : 2, ஷாரா : 26, அல் அரபி ஸ்டேடியம் அருகே) அரங்கத்தில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-tic) ஏற்பாடு செய்யும் சாதிக்க வைப்போம்!என்ற கருப்பொருளில் இரண்டாவது கல்வி விழிப்புணர்வு முகாம் மற்றும் கருத்து பரிமாற்ற நிகழ்வுநடைபெற இருக்கின்றன.
 
       சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லானா மவ்லவீ அஷ்ஷைக் M.S. முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெறும் இம்முகாமில் சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A., அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார்.  
 
       இச்சிறப்புமிகு முகாமில் சங்கத்தின் கல்விக் குழு செயலாளர்கள் திருநெல்வேலி ஷஃபி கல்வி அறக்கட்டளையின் தாளாளரும், குவைத் இந்தியன் இன்டகிரேடட் பள்ளி இணைப் பேராசிரியரும், சிறந்த கல்வியியல் ஆய்வாளருமான முனைவர் பேராசிரியர் M. அப்துல் ஹமீத் M.Sc., M.Phil, B.Ed., PhD., அவர்களும், குவைத் யுனிவர்ஸல் அமெரிக்கன் கலாசாலையின் சிறப்பாசிரியரும், குவைத் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான ஓட்டி (பைலட்) பயிற்சியாளரும், சிறந்த மனோதத்துவ அறிஞருமான பேராசிரியர் A. அப்துர் ரஹீம் M.A., M.Ed., QTIC, அவர்களும் சிறப்புரையாற்றுவதுடன் கல்வி குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கின்றனர்.
 
                இச்சிறப்பு மிகு நிகழ்வில் குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் கருத்து வேறுபாடுகளை களைந்து பங்கேற்று பயனடையுமாறும், தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செயது கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், கல்விக்குழுவினர் மற்றும் களப்பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.
 

       மேலதிக செய்திகளுக்கும், சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கும் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.K-Tic.com என்ற இணையதளத்தை பார்வையிடுமாறும், தங்களின் மேலான கருத்துக்கள், ஆலோசனைகளை q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறும், உடனுக்குடன் தகவல்கள் தங்களின் மின்னஞ்சல்களுக்கு வந்து சேர http://groups.yahoo.com/group/K-Tic-group என்ற யாஹு குழுமத்தின் தங்களை இணைத்துக் கொள்ளுமாறும் சங்க செய்திக்குறிப்பு அழைப்பு விடுக்கின்றது. நன்றி. வஸ்ஸலாம்.            

செய்தி :    

தகவல் தொடர்பு பிரிவு,

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)

 

இணையதளம்                 : www.k-tic.com

மின்னஞ்சல்                      : q8tic@yahoo.com

யாஹூ குழுமம்           : http://groups.yahoo.com/group/K-Tic-group


மாணவ - மாணவிகளுக்கான வழிகாட்டி முகாம்

மே 9, 2008

USF நடத்தும் மாணவ - மாணவிகளுக்கான வழிகாட்டி முகாம் மற்றும் புத்தக வெளியீட்டு விழா

 

10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மேற்படிப்பு வழிகாட்டி முகாம் மற்றும் “நாமும் சாதிக்கலாம்” புத்தக வெளியீட்டு விழா

யுனைட்டட் ஸ்டூடன்ட்ஸ் ஃபிரன்ட் (USF) அமைப்பின் நிர்வாகி திரு. T.R. ஜியாவுதீன் B.E அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பில் தெறிவிக்கப்பட்டுள்தாவதுஇ யுனைட்ட் ஸ்டூடன்ட்ஸ் ஃபிரன்ட் (USF) அமைப்பின் சார்பாக தமிழகமெங்கும் மாவட்ட வாரியாக 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மேற்படிப்பு வழிகாட்டி முகாம் கள் நடத்தப் பட்டு வருகின்றன அதன் தொடாச்சியாக நாளை 10.05.2008 சனிக்கிழமை சென்னை, திருவல்லிக்கேணி, ஆதம் மாக்கெட், அஹமது அலி பார்பியா மெட்ரிக்குலேசன் பள்ளியில் காலை 10.00 மணியளவில் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மேற்படிப்பு வழிகாட்டி முகாம் மற்றும் “நாமும் சாதிக்கலாம்” புத்தக வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

இந்நிகழச்சியில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பல கல்வியாளர்களும், பிரபலங்களும் கலந்து கோண்டு மாணவுமாணவிகளுக்கு ஆலோசனைகள் வழங்க உள்ளார்கள்.

டாக்டர் ஜீலானி MBBS, BCH

டிரஸ்ட்டி, ஜான் டிரஸ்ட்

டாக்டர் ஆயிஷா ஹமீது

மேனேஜி்ங் டிரஸ்ட்டி - ஹிதாயா வெல்ஃபேர் டிரஸ்ட்

ஜனாபா. A. நஷீமா பேகம் M.A

முதல்வர் - அஹமது அலி பார்பியா மெட்ரிக் பள்ளி

பேராசிரியர் M. ஹமீது ஹீசைன் M.E

ஆலிம் முஹம்மது சாலிஹ் பொறியியல் கல்லுர்ரி

ஜனாப் N. முஹம்மது B.E

சீனியர் நெட்வொர்க் இன்ஜினியர்

ஆகியோர் உட்பட பலர் கலந்து நமது மாணவ மாணவிகளின் எதிர்காலத்திற்கு தேவையான ஆலோசனைகளை வழங்க உள்ளார்கள் ஆகவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்பி இந்நிகழச்சியில் கலந்து கொண்டு பயன் பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்வதாக யுனைட்டட் ஸ்டூடன்ட்ஸ் ஃபிரன்ட் (USF) அமைப்பின் நிர்வாகி திரு. T.R. ஜியாவுதீன் B.E அவர்கள் தெறிவித்துள்ளார்கள்.

நன்றி: முதுவை ஹிதாயத்

மேற்கல்வியைத் தொடர மேலான உதவிகள்

ஏப்ரல் 18, 2008
கல்வியில் பின் தங்கியுள்ள இஸ்லாமிய சமூகத்தை எதிர்காலத்தில் கல்வியில் வளம்பெற்ற சமூகமாக வார்த்தெடுக்க பல்வேறு இஸ்லாமிய தொண்டு நிறுவனங்கள் தங்கள் பங்களிப்பை நல்கி வருகின்றன. இவ்வகையில் ‘சமூக நீதி அறக்கட்டளை’ மேற்கல்வி கற்க ஆர்வமுள்ள, அதேசமயம் வறுமை காரணமாக தொடர இயலாத ஆதரவற்ற முஸ்லிம் மாணவர்கள் தங்கள் மேற்கல்வியைத் தொடர அருமையான திட்டங்களை வகுத்து மாணவர்களை ஊக்குவிக்க முன்வந்துள்ளது.
ஆதரவற்ற மாணவர்கள் தாங்கள் பள்ளி இறுதி வகுப்பில் பெற்ற மதிப்பெண் சான்றிதழ், அத்துடன் ஆதரவற்றவர்கள் என்பதை உறுதிப்படுத்தி ஊர் ஜமாஅத் தலைவர், அல்லது தாங்கள் சார்ந்துள்ள ஏதேனும் இஸ்லாமிய இயக்கக் கிளைகளின் அத்தாட்சிகளுடன் சமூக நீதி அறக்கட்டளைக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலதிக விபரங்களுக்கு கீழ்க்காணும் வலைத்தளத்தைப் பார்வையிடவும். அல்லது சமூக நீதி அறக்கட்ளையின் தலைமையகத்தைத் தொடர்பு கொள்ளவும்.
இஸ்லாமிய சமூகம் கல்வியில் உயர்வு பெற, இத்தகவலை தங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் அனுப்பி சமுதாய சேவையில் பங்கேற்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

வலைத்தள முகவரி
http://samooganeethi.org/

ஆதரவற்ற மாணவர்கள் தங்களைப் பற்றிய விபரங்களை அனுப்ப வேண்டிய முகவரி
SAMOOGA NEETHI ARAKATTALAI
NEW NO : 129, OLD NO : 64
THAMBUCHETTY STREET
CHENNAI – 600 001
TAMIL NADU

PHONE : +91 9382 155 780.

நன்றி:   http://akkuroriental.blogspot.com/2008/04/blog-post_2885.html


குழந்தைகளின் ஆரம்பக் கல்வி இஸ்லாம்!

ஏப்ரல் 12, 2008
குழந்தைகளின் ஆரம்பக் கல்வி இஸ்லாம்!
 
முன்னுரை
 
குழந்தைகள் பெற்றோருக்குக் கண்குளிர்ச்சியாவார்கள். குடும்ப அமைப்பைத் தழைக்கச் செய்யும் குலக்கொழுந்துகள் ஆவார்கள். குடும்பக் கட்டுமானத்தின் வாரிசுகள் மட்டுமின்றி, சமுதாய, தேச சீரமைப்புகளுடைய வருங்காலச் சந்ததிகளாகத் திகழ்கின்றனர். அவர்களால்தான் மனித வாழ்வு இனிமை பெறுகிறது. அவர்கள் மீதே நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஏற்படுகிறது. மேற்கூறிய அனைத்தும் சிறந்த முறையிலான குழந்தை வளர்ப்பின் மூலமும் அவர்களுக்கு ஊட்டப் படும் இஸ்லாமிய ஆரம்பக் கல்வி மூலமும் தான் சாத்தியமாகும்.
 
நல்ல கல்வி
குழந்தைகளை நல்லொழுக்கமுடையவர்களாக வளர்ப்பதில் பெற்றோரின் பங்கு மிக முக்கியமானதாகும். குழந்தைகளுக்கு மிகச்சிறந்த கல்வியளித்து, உயர் பட்டதாரிகளாக அவர்களை உருவாக்கி மகிழ்வதற்காகப் பெற்றோர் காலமெல்லாம் படாதபாடு படுகின்றனர். செல்வமும் கல்வியும் சேர்த்துக் கொடுத்தாலுங்கூட நல்லொழுக்கமில்லாவிட்டால் அதனால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை. நல்லொழுக்கம் என்னும் அடித்தளத்தின் மீது, கல்வி, செல்வம் முதலியவற்றை அமைத்துக் கொடுத்தல் வேண்டும். அப்போது தான் குழந்தைகள் மட்டுமின்றி குடும்பமும் சமுதாயமும் பெரும் பயன் பெறும்.
 
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு தந்தை தன் குழந்தைகளுக்கு நல்லொழுக்கத்தை விடச் சிறந்ததாக வேறு எதையும் விட்டுச் செல்வது கிடையாது [அறிவிப்பாளர் : ஸயீத் பின் ஆஸ்(ரலி); நூல்: திர்மிதீ].

கலாச்சாரச் சீரழிவு
காணும் திசையெங்கும் இப்போது ஒழுங்கீனங்கள் மலிந்து காணப்படுகின்றன. இவை பள்ளிக் குழந்தைகளின் சின்னஞ்சிறு வயதிலேயே அவர்களுடைய மனதில் பதிந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சினிமா, டிவி, பத்திரிகைகள், விளம்பரங்கள் போன்ற கலாச்சாரச் சீரழிவு சக்திகளால் இக்காலக் குழந்தைகள் பெரிதும் கவரப்படுகின்றனர். இவற்றிலிருந்து பெற்றோர் தங்களைக் காத்துக் கொள்வதோடு, தம் குழந்தைகளையும் காத்து வளர்க்கக் கடமைப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்லாமியக் கல்விதான் ஒரே தீர்வு.

இஸ்லாமியக் கல்வி

குழந்தைகளுக்குப் பிள்ளைப் பருவத்திலேயே தொழுகையைக் கடைப்பிடிக்கக் கட்டளையிடவேண்டும்.
 
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குழந்தை ஏழு வயதை எட்டி விடும்போது, தொழுமாறு ஏவுங்கள். பத்து வயதை அடைந்தும் தொழுகையைத் தவறவிட்டால், அடியுங்கள். மேலும், படுக்கையைத் தனித்து அமையுங்கள் [அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி); நூல்: முஸ்லிம்].

நிச்சயமாகத் தொழுகையானது, மானக்கேடான, கேவலமான செயல்களிலிருந்து மனிதனைப் பாதுகாக்கின்றது எனத் திருமறை குர்ஆன் (29:45) கூறுகின்றது.

நமக்கெல்லாம் பேரருளாக இறைவனால் வழங்கப் பட்டுள்ள திருமறை குர்ஆன் பற்றிய கல்வியையும் நபி(ஸல்) அவர்களின் நல்வாழ்க்கை பற்றிய வரலாற்று அறிவையும் குழந்தைகளின் மனதில் பதியுமாறு எடுத்துரைத்து, அவர்களை இளம் பருவத்திலேயே இஸ்லாமிய வார்ப்பில் வடித்தெடுக்க வேண்டியது பெற்றோரின் இன்றியமையாத கடமையாகும்.
 
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தந்தை தன் மக்களுக்கு அளித்திடும் அன்பளிப்புக்களில் மிகச் சிறந்தது நல்ல கல்வியாகும் [நூல்: திர்மிதீ; அறிவிப்பாளர்: ஸயீது பின் ஆஸ் (ரலி)].

மருத்துவம், பொறியியல், கம்ப்யூட்டர் கல்வி போன்ற துறைகளில் தம் பிள்ளைகளைப் பிரகாசிக்கச் செய்ய வேண்டும் என்று அதீத அக்கறை எடுக்கும் முஸ்லிம் பெற்றோர் பலர், தம் பிள்ளைகள் இஸ்லாத்தின் அடிப்படைகளாகிய திருக்குர்ஆனைப் பற்றியும் நபி(ஸல்) அவர்களின் பொன்மொழிகளைப் பற்றியும் ஓரளவுக்கேனும் தெரிந்து வைத்திருக்க வேண்டுமே என்று நினைப்பதில்லை.

 
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அறிவைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாயக் கடமையாகும் [அறிவிப்பாளர்: அனஸ் (ரலி); நூல்: இப்னுமாஜா].

ஏழு வயதில் குழந்தைகளைத் தொழுமாறு ஏவக் கடமைப் பட்ட பெற்றோர், தம் எழுபது வயதில் கூடத் தொழுகையை மறந்து திரிகின்ற அவல நிலை, நம் கண்ணெதிரே காணப் படுகின்றது.

குழந்தைகளைக் கண்காணித்தல்
பெற்றோர், தம் மக்களைக் கண்காணித்து, எதைப் படிக்கிறார்கள், எழுதுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தங்களுக்கென எப்படிப்பட்ட விஷயங்களில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதையும் அவர்கள் தங்களை அறியாமலேயே எப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். தம் பிள்ளைகளுடன் இணைந்திருக்கும் அவர்களின் நண்பர்களைப் பற்றியும் ஓய்வு நேரங்களில் எப்படிப்பட்ட இடங்களுக்குத் தம் பிள்ளைகள் செல்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்வதற்காக அவர்கள் அறியாத வகையில் கண்காணிக்க வேண்டும்.

தீய பழக்கங்களின்பால் தம் பிள்ளைகள்