அஞ்சல் பற்றி
எல்லையில்லா அருளாளன் இணையில்லா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப் பெயரால்…………
அன்பிற்கினிய அல்லாஹ்வின் நேசர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
இம்மடல் உங்களை உயாவான உடல் நலத்துடனும் உன்னத இஸ்லாமிய உணர்வுடனும் சந்திக்கட்டுமாக நிற்க.
என்ன தான் தொலைபேசி உபயோகம் உலகை ஆட் கொண்டாலும், கடிதம் எழுதுவதிலும், கடிதத்தைப் படிப்பதிலும் கிடைக்கும் சுகமே தனி.
பொதுவாகவே கடிதங்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உடமைகள். மற்றவர் அவர் எவ்வளவு தான் நெருங்கியவராக இருந்தாலும் அடுத்தவரின் கடிதங்களைப் படிப்பதற்கு அனுமதியில்லை. ஆனால் சில கடிதங்கள் அனைவருக்கும் பொதுவாக எழுதப்படுவதுண்டு. பொதுவான அறிவுரைகள், அனைவருக்கும் தெரிவிக்க வேண்டிய செய்திகள், சமுதாய நலன் கருதி எழுதப்படும் மடல்கள், போன்றவை இதில் அடங்கும்.
ஈமெயில்கள் எனப்படும் மின்னஞ்சல்களிலும் ஒருவருக்கொருவர் தனிப்பட்ட முறையில் எழுதப்படும் அஞ்சல்கள் தவிர சமுதாயத்திற்குப் பயன் தரத்தக்க மின்னஞ்சல்களும் உண்டு. இது போன்ற பொதுவான மின்னஞ்சல்கள் பலராலும் எழுதப்படுகின்றன.. எழுதப்படும் மின்னஞ்சல் தனிப்பட்டவர்களுக்காக எழுதப்பட்டதா? அல்லது பொதுவாக பலரும் படிப்பதற்காக எழுதப்பட்டதா? என்பதைக் கண்டறிந்து அவ்விதம் சமுதாய் நலன் கருதி எழுதப்பட்ட பல்வேறு மின் மடல்களை ஒன்றாகத் தொகுத்து அனைவரும் பயன் பெறத் தொடங்கப்பட்டது தான் இந்த மின்னஞசல் பதிவு.
இணையத்தில் பரவலாகப் பலரால் உபயோகப்படுத்தப்பட்டு வரும் மடலாடற்குழுமங்களில் அவ்வப்போது பெறப்படும் பயனு்ள்ள மின்னஞ்சல்களைத் தொகுத்து அவற்றை வகைப்படுத்தி இப்பதிவில் வெளியிடுவோம் இன்ஷா அல்லாஹ்..
இப்பதிவைப் பற்றிய தங்கள் மேலான ஆலோசனைகளையும் அபிப்பிராயங்களையும் அன்புடன் வரவேற்கிறோம்..
எல்லாம் வல்ல அல்லாஹ் நமது தூய நற்பணிகளை அங்கீகரித்து நல்லருள் புரிவானாக. ஆமீன்.
அன்புடன்
மஸ்தூக்கா