அறிமுகம்

அஸ்ஸலாமு அலைக்கும்

பெப்ரவரி 4, 2008 by masdooka

எல்லையில்லா அருளாளன் இணையில்லா அன்புடையோன்

அல்லாஹ்வின் திருப் பெயரால்……

தரணியெங்கும் வாழும் தமிழ் முஸ்லிம் நெஞ்சங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். இம்மடல் உங்களை உயாவான உடல் நலத்துடனும் உன்னத இஸ்லாமிய உணர்வுடனும் சந்திக்கட்டுமாக! நிற்க

தங்கள் உற்ற குடும்பத்தினர் மீதும்,  உத்தம நண்பர்கள் மீதும் கொண்டிருக்கும் அளவிட முடியாத அன்பின் காரணமாக அவர்களுக்கு மடல் எழுதுவதையும், அவர்களிடமிருந்து வரும் அன்பான மடல்களை ஆவலுடன் எதிர்பார்ப்பதையும் தாங்கள்  வழக்கமாகக்  கொண்டவர் என்றால், அதே போல சமுதாயத்தின் மீதும் தாங்கள் வைத்திருக்கும் பாசத்திற்கும் நேசத்திற்கும் பாலமாக இந்த அஞ்சலகம் செயல்படும். இன்ஷா அல்லாஹ்.

தங்களுக்கு வரும் இஸ்லாம் மற்றும் முஸ்லிம் சமுதாயத் தொடர்புடைய மின்னஞ்சல்கள்  தங்களை வந்தடையவும், அதே போல சமுதாய் நலன் கருதி தாங்கள் எழுதும் மின்னஞ்சல்கள் உரிய முறையில் சமுதாயத்தைச் சென்றடையவும் இந்த அஞ்சலகம் தங்களுக்கு பயன்படும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் நடத்துவானாக. ஆமீன்.

வஸ்ஸலாம்

அன்புடன்

மஸ்தூக்கா

masdookaa@hotmail.com

masdookaa@yahoo.com

மறுமொழி இடுக

பின்னூட்டம் இட புகுபதிகை செய்திருக்கவேண்டும்