குவைத்தில் கல்வி விழிப்புணர்வு முகாம்

மே 14, 2008

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

 

சாதிக்க வைப்போம்!

கல்வி விழிப்புணர்வு முகாம்மற்றும் கருத்து பரிமாற்ற நிகழ்வு

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!

 

                பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம…

 

       நம் பிள்ளைகளுக்கு ஏற்ற கல்வி எது? 12 மற்றும் 10ம் வகுப்புக்கு பிறகு உள்ள மேற்படிப்புகள் என்ன? எதிர்கால உள்நாடு மற்றும் வெளிநாடு கல்வி பற்றிய ஓர் அலசல், என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? எப்படி படிக்கலாம்? எப்போது படிக்கலாம்? ஆகியவற்றின் விரிவான விளக்கங்கள், கல்வி உதவித் தொகை குறித்த ம(ற)றைக்கப்பட்ட உண்மைகள் போன்றவற்றை குறித்து மேலதிக விபரங்களை அறிந்து கொள்வதற்கும், அனைவரும் தெரிந்து கொள்வதற்கும், கல்வி குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்கும், சந்தேகங்களில் தெளிவு பெறுவதற்கும்…
 
       இன்ஷா அல்லாஹ் வருகின்ற 23-05-2008 வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணி முதல் மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து இரவு 9:00 மணி வரை குவைத், மன்சூரிய்யா பகுதியில் உள்ள ரிஃபாயி தீவானியா‘ (கத்ஆ : 2, ஷாரா : 26, அல் அரபி ஸ்டேடியம் அருகே) அரங்கத்தில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-tic) ஏற்பாடு செய்யும் சாதிக்க வைப்போம்!என்ற கருப்பொருளில் இரண்டாவது கல்வி விழிப்புணர்வு முகாம் மற்றும் கருத்து பரிமாற்ற நிகழ்வுநடைபெற இருக்கின்றன.
 
       சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லானா மவ்லவீ அஷ்ஷைக் M.S. முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெறும் இம்முகாமில் சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A., அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார்.  
 
       இச்சிறப்புமிகு முகாமில் சங்கத்தின் கல்விக் குழு செயலாளர்கள் திருநெல்வேலி ஷஃபி கல்வி அறக்கட்டளையின் தாளாளரும், குவைத் இந்தியன் இன்டகிரேடட் பள்ளி இணைப் பேராசிரியரும், சிறந்த கல்வியியல் ஆய்வாளருமான முனைவர் பேராசிரியர் M. அப்துல் ஹமீத் M.Sc., M.Phil, B.Ed., PhD., அவர்களும், குவைத் யுனிவர்ஸல் அமெரிக்கன் கலாசாலையின் சிறப்பாசிரியரும், குவைத் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான ஓட்டி (பைலட்) பயிற்சியாளரும், சிறந்த மனோதத்துவ அறிஞருமான பேராசிரியர் A. அப்துர் ரஹீம் M.A., M.Ed., QTIC, அவர்களும் சிறப்புரையாற்றுவதுடன் கல்வி குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கின்றனர்.
 
                இச்சிறப்பு மிகு நிகழ்வில் குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் கருத்து வேறுபாடுகளை களைந்து பங்கேற்று பயனடையுமாறும், தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செயது கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், கல்விக்குழுவினர் மற்றும் களப்பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.
 

       மேலதிக செய்திகளுக்கும், சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கும் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.K-Tic.com என்ற இணையதளத்தை பார்வையிடுமாறும், தங்களின் மேலான கருத்துக்கள், ஆலோசனைகளை q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறும், உடனுக்குடன் தகவல்கள் தங்களின் மின்னஞ்சல்களுக்கு வந்து சேர http://groups.yahoo.com/group/K-Tic-group என்ற யாஹு குழுமத்தின் தங்களை இணைத்துக் கொள்ளுமாறும் சங்க செய்திக்குறிப்பு அழைப்பு விடுக்கின்றது. நன்றி. வஸ்ஸலாம்.            

செய்தி :    

தகவல் தொடர்பு பிரிவு,

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)

 

இணையதளம்                 : www.k-tic.com

மின்னஞ்சல்                      : q8tic@yahoo.com

யாஹூ குழுமம்           : http://groups.yahoo.com/group/K-Tic-group


மாணவ - மாணவிகளுக்கான வழிகாட்டி முகாம்

மே 9, 2008

USF நடத்தும் மாணவ - மாணவிகளுக்கான வழிகாட்டி முகாம் மற்றும் புத்தக வெளியீட்டு விழா

 

10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மேற்படிப்பு வழிகாட்டி முகாம் மற்றும் “நாமும் சாதிக்கலாம்” புத்தக வெளியீட்டு விழா

யுனைட்டட் ஸ்டூடன்ட்ஸ் ஃபிரன்ட் (USF) அமைப்பின் நிர்வாகி திரு. T.R. ஜியாவுதீன் B.E அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பில் தெறிவிக்கப்பட்டுள்தாவதுஇ யுனைட்ட் ஸ்டூடன்ட்ஸ் ஃபிரன்ட் (USF) அமைப்பின் சார்பாக தமிழகமெங்கும் மாவட்ட வாரியாக 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மேற்படிப்பு வழிகாட்டி முகாம் கள் நடத்தப் பட்டு வருகின்றன அதன் தொடாச்சியாக நாளை 10.05.2008 சனிக்கிழமை சென்னை, திருவல்லிக்கேணி, ஆதம் மாக்கெட், அஹமது அலி பார்பியா மெட்ரிக்குலேசன் பள்ளியில் காலை 10.00 மணியளவில் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மேற்படிப்பு வழிகாட்டி முகாம் மற்றும் “நாமும் சாதிக்கலாம்” புத்தக வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

இந்நிகழச்சியில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பல கல்வியாளர்களும், பிரபலங்களும் கலந்து கோண்டு மாணவுமாணவிகளுக்கு ஆலோசனைகள் வழங்க உள்ளார்கள்.

டாக்டர் ஜீலானி MBBS, BCH

டிரஸ்ட்டி, ஜான் டிரஸ்ட்

டாக்டர் ஆயிஷா ஹமீது

மேனேஜி்ங் டிரஸ்ட்டி - ஹிதாயா வெல்ஃபேர் டிரஸ்ட்

ஜனாபா. A. நஷீமா பேகம் M.A

முதல்வர் - அஹமது அலி பார்பியா மெட்ரிக் பள்ளி

பேராசிரியர் M. ஹமீது ஹீசைன் M.E

ஆலிம் முஹம்மது சாலிஹ் பொறியியல் கல்லுர்ரி

ஜனாப் N. முஹம்மது B.E

சீனியர் நெட்வொர்க் இன்ஜினியர்

ஆகியோர் உட்பட பலர் கலந்து நமது மாணவ மாணவிகளின் எதிர்காலத்திற்கு தேவையான ஆலோசனைகளை வழங்க உள்ளார்கள் ஆகவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்பி இந்நிகழச்சியில் கலந்து கொண்டு பயன் பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்வதாக யுனைட்டட் ஸ்டூடன்ட்ஸ் ஃபிரன்ட் (USF) அமைப்பின் நிர்வாகி திரு. T.R. ஜியாவுதீன் B.E அவர்கள் தெறிவித்துள்ளார்கள்.

நன்றி: முதுவை ஹிதாயத்

இன்று முதல் peace tv தினந்தோறும் ஒளி பரப்பு ஆரம்பம்

மே 5, 2008

 

YOU CAN WATCH  “PEACE T.V”
TODAY AT 7PM (SAUDI ARABIAN TIME)
INDIAN TIME 9.30PM
 
ALL INTERNATIONAL ORATORS IN ONE STAGE 
 
DONT MISS!
GOLDEN OPPORTUNITY TO SEE AND GET KNOWLEDGE
FROM FAMOUS INTERNATIONAL ORATORS FROM WORLD WIDE
 
இனிய இஸ்லாமிய பெருமக்களுக்கு
ஒரு அறிய வாய்ப்பு
இன்று முதல் தினசரி (ஞாயிறு நீங்கலாக) இரவு 7 மணி (சவூதி நேரம்)
இந்திய நேரம் 9.30 இரவு
 
பீஸ் டி.வியில் இஸ்லாமிய சிம்போசியம்
 
கீழ்கண்ட ஒரேட்டர்கள் பங்கு பெரும் மாபெரும் நிகழ்ச்சிகள்
பீஸ் டி.வியில் ஒளிபரப்பு ஆரம்பம் ஆகிறது
இன்ஷா அல்லாஹ்
 
அரிய சந்தர்பம் தவறவிடாதீர்கள்!
 
உங்கள் நண்பர்கள் குழு/மற்றும் மாற்று மத நண்பர்கள் குழுவிற்கும்
 
இந்த செய்தியை பரப்பி
 
இஸ்லாமிய செய்தியை பரப்ப உதவுங்கள்
அல்லாஹ் போதுமானவன்
 
நன்றி: asalamone@rediffmail.com 
 
 

 
 
 
 

Israr Ahmed

Jamal Badawi

Siraj Wahaj

Bilal Philips

Yusuf Islam

M. Maghraoui

Yusuf Estes

A. Rahim Green

Abdul Hakim Quick

Hussain Yee

Dr. Mamdouh Mohamed

Yassir Fazaga

Yasir Qadhi

Uthman Barry

Salem Al Amry

Assim Al Hakeem

Ahmed Saifuddin

Riaz Ansary

Hussein Hamed Hassan

Shabbir Ali
 

Ahmed Sakar
Ahmed Sakar

Abdul Karim Parekh

Ghulam Malik Murtaza

Gary Miller

Jeffery Lang

Ahmed Von Denffer

Jafar Sheikh Idris

Abdallah Idris Ali

Ali Tamimi

Tareq Al Suwaidan

Hamza Abdul Malik

Muhammed Adly

Muneer El Kassem
 

__._,_.___


துபை மாநகரில் தமிழ் இஸ்லாமிய இஸ்திமா..

மே 1, 2008
அல்லாஹ்வின் திருப்பெயரால்..

துபை மாநகரில் தமிழ் இஸ்லாமிய இஸ்திமா..

துபை மாநகரில் தமிழ் இஸ்லாமிய இஸ்திமா நிகழ்ச்சியானது, 25.4.2008 வெள்ளிக்கிழமை அஸர் முதல் இஷா வரை டேரா துபையில் உள்ள இந்தியன் இஸ்லாஹி சென்டரில் இனிதாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக சகோதரர். அமீர் சுல்தான் அவர்கள் கிராஆத் ஓதினார். அதனை தொடர்ந்து சகோதரர். ஷிப்காத்துல்லாஹ் அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் முதல் அமர்வின், சிறப்பு உரையினை சகோதரர். அப்துல் ஸலாம் மதனி (இயக்குனர் - அல் மனார் திருக்குர்ஆன் பயிற்சி மையம் - அல் கூஸ் - துபை) அவர்கள் நிகழ்த்தினார். அவரின் சிறப்பு உரையினை தொடர்ந்து தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள மெளலவி. நூருல் அமீன் அவர்கள் நிகழ்த்தினார்.

ம.ரிப் தொழுகை முடிந்தவுடன் இரண்டாவது அமர்வானது துவங்கியது. துபை இந்தியன் இஸ்லாஹி சென்டரில் பணியாற்றும் கேரளாவைச்சார்ந்த மெளலவி. ஷிஹாப் எடக்கர அவர்கள் உரை நிகழ்த்தும் போது, சத்திய மார்க்கத்தினை எடுத்துரைக்கும் பணியினை துபாயில் இருக்கும் அனைத்து மாநில இஸ்லாமிய சகோதரர்களும் தத்தம் பணியினை திறம் பட செய்ய வேண்டும். இந்த பணியில் ஏற்படும் சிரமங்களையும், கஷ்டங்களையும் பொறுத்துக்கொண்டு நாம் மேற்கொண்ட பணியில் தொய்வு இல்லாமல் செய்தால் மறுமையில் அல்லாஹ்விடத்தில் நமக்கு கூலி கிடைக்கும் என்பது போன்ற பல கருத்துக்களை, தமிழ் பேசக்கூடிய சகோதரர் புரிந்துக்கொள்ளும் விதத்தில் மலையாளம் கலந்த தமிழில் எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சி முடிந்து வெளியே சென்ற அனைத்து சகோதரர்களின் உள்ளங்களிலும் ஒரு மாற்றத்தினை அல்லாஹ் நாடினால் ஏற்படுத்தக்கூடிய அளவில் இருந்தது அவருடைய உரைகள் கற்கள். அதனை தொடர்ந்து சகோதரர். நாஸர் அலி கான் அவர்கள் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் ஏகத்துவ கொள்கையில் பற்றுள்ள அனைத்து சகோதர உள்ளங்களும் எந்த விதமான கருத்து பரிமாற்றங்களும் இல்லாமல் கலந்துக்கொண்டதினை காணும் போது, இஸ்லாமிய சகோதரர்களிடையே ஒற்றுமையானது ஏற்படும் என்பது திண்ணம். அல்லாஹ்வின் திருப்பொருத்ததை நாடி நடை பெற்ற இந்த நிகழ்ச்சியினை இந்தியன் இஸ்லாஹி சென்டர் – தமிழ் பிரிவு – துபை மிகச் சிறப்பாக செய்து இருந்தது. தமி்ழ் இஸ்லாமிய நி்கழ்ச்சியினை கேட்பதற்கு கேரளாவை சார்ந்த பல சகோதரர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

தகவல் : அபூ ஆஃப்ரின


புனித ஹஜ் பயணம் 2008 : விண்ணப்பம் வழங்கல்‏

ஏப்ரல் 30, 2008
தமிழ்நாட்டில் வசிக்கும் முஸ்லிம் பெருமக்களில், ஹஜ்-2008 ஆம் ஆண்டில் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்ள விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்களை மத்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது.
 
ஹஜ்-2008 ஆம் ஆண்டிற்கான ஹஜ் விண்ணப்பங்கள்
மற்றும் அச்சடிக்கப்பட்ட வழிமுறைகளை, சென்னை-34, புதிய எண்.13 (பழைய எண்.7), மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் அமைந்துள்ள
தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து விண்ணப்பம் ஒன்றுக்கு சேவைக்கட்டணம் ரூ.100/- வீதம் சென்னையில் மாற்றக்கூடிய வகையில் ‘தமிழ்நாடு மாநில ஹஜ் குழு’
பெயரில் கேட்பு வரைவோலை/பணக்கொடுப்பாணை கொடுத்து 1-5-2008 முதல் விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பப்படிவங்கள் கோரும் கோரிக்கைகளை,
விண்ணப்பம் ஒன்றுக்கு ரூ.100/-ற்கான வரைவோலையுடன் (டிமாண்ட் டிராப்ட்) சென்னை, தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள். வழிமுறைகளின் அடிப்படையில் ஒரு குழு/உறையில் ஆறு விண்ணப்பங்களுக்கு மிகாமல் உள்ளடங்கியதாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
 
2. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், தேவையான ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் நபரொன்றுக்கு, அந்நியச் செலாவணி முன்பணம் மற்றும் பலவகைக் கட்டணங்களுக்காக
ரூ.10,700/-(ரூபாய் பத்தாயிரத்து எழுநூறு மட்டும்)-ஐ பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழுவிற்கான நடப்புக் கணக்கு எண்.30361856116-ல் செலுத்தியதற்கான ரசீதின் நகலுடன் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்கவேண்டும். பூர்த்தி செடீநுயப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டிய கடைசி நாள் 31-5-2008 ஆகும்.
 
3. புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகள், கோரிக்கை மனுவுடன் விண்ணப்பம் ஒன்றுக்கு ரூ.100/-ஐ வரைவோலையாக (டிமாண்ட் டிராப்ட்) செலுத்தி, நேரடியாகவோ அல்லது
தபால் மூலமாகவோ விரைந்து அனுப்பி விண்ணப்பப்படிவங்களைப் பெற்றுக் கொள்ளுமாறும்,அவற்றை கடைசி தேதிக்கு முன்னர் சமர்ப்பித்து விண்ணப்பங்கள் உறுதி செலுத்துவதில் ஏற்படும்
சிரமங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 
 

நன்றி:
imantimes@googlegroups.com


இராக்கின் இறையில்லம் ஒன்றில் அமெரிக்க அரக்கர்கள்

ஏப்ரல் 27, 2008

நன்றி: K.Mohamed Ameen (Thiruppanthuruthi) DUBAI


நர்கிஸ் - மல்லாரிப் பதிப்பகம் நாவல்-கட்டுரைப் போட்டிகள்‏

ஏப்ரல் 23, 2008

நர்கிஸ் - மல்லாரிப் பதிப்பகம்

          இணைந்து நடத்தும்

“முகம்மது இஸ்மாயில் -இபுறாஹீம் பீவி நினைவு”

       நாவல் -கட்டுரைப் போட்டிகள்

          கட்டுரை

          தலைப்பு

  “இஸ்லாமிய வெளிச்சத்தில் மனித நேயம்”

முதல் பரிசு: ரூபாய்     5000/-
இரண்டாம் பரிசு:         3000/-
மூன்றாம் பரிசு:         2000/
5 ஆறுதல் பரிசுகள் :      1000/-

விதிகள்

1.கட்டுரை 12 முதல் 15 அத்தியாயங்களைக் கொண்டதாக அமையவேண்டும்.

2. ஒவ்வொரு அத்தியாயமும்  வெள்¨ளை முழுத்தாள் அளவில் (A-4) கையெழுத்தில்
4 - 6 பக்கம் அச்சில் 3 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும்

3. குர்ன் , ஹதீஸ் , நூல் மேற்கோல்கள் பயன்படுத்தும் போது சரியான
ஆதாரங்கள் தரப்பட வேண்டும்.

 நாவல்

முதல் பரிசு: ரூபாய  5000/-
இரண்டாம் பரிசு:         3000/-
மூன்றாம் பரிசு:         2000/
5 ஆறுதல் பரிசுகள் :      1000/-

விதிகள்

1.இஸ்லாமிய விழுமியங்கள், கலாசாரம், சமூக ஒற்றுமை, மனிதநேயம்,
நாட்டுப்பற்று மேவும் முஸ்லிம் வாழ்வியலை மையமாக வைத்து எழுதப்படும்
சமகால சமூக நாவலாயிருக்கவேண்டும். வரலாற்று நாவல்கள் ஏற்றுக்
கொள்ளப்படமாட்டா.

2. அத்தியாயங்கள் 15 முதல் 18 -க்கு மிகாமல் இருக்கவேண்டும்.

3. ஒரு அத்தியாயம் வெள்¨ளை முழுத்தாள் அளவில் (A-4) கையெழுத்தில் 6 - 8
பக்கம் அச்சில் 4 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும்

பொது விதிகள்

1.போட்டிகளில் பங்கு பெறுவோர் தனித்தாளில் தங்களது சரியான
பெயர்/தகப்பனார்/கணவர் பெயர்கள் /கல்வித்தகுதி/ முகவரி/ தொலைபேசி எண்கள்/
ஈமெயில் இவற்றுடன் ஆக்கம் தங்களுக்குச் சொந்தமானதென்றும், தழுவலோ அல்லது
மொழிபெயர்ப்போ அல்லவென்றும், போட்டி விதிகளுக்குக் கட்டுப்படுவதாகவும்
உறுதிமொழி அளித்து கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும்

2. ஒரு பக்கம் மட்டுமே எழுத / டைப் செய்ய வேண்டும்

3. ஆக்கங்களை தபாலிலோ / கூரியர் சர்வீஸிலோ அனுபலாம். க்கங்கள் கிடைத்த
ஒரு வாரத்துக்குள் பெற்றுக்கொண்டதற்கான தகவல் அனுப்பப்படும். அதன் பிறகு
அது சம்பந்தமாக அனைத்து கடித/ ஈமெயில்/ தொலைபேசித் தொடர்புகள்
தவிர்க்கப்பட வேண்டும்.

4. நர்கிஸ் - மல்லாரி பதிப்பகம் நியமிக்கும் நீதிபதிகளின் தீர்ப்பே இறுதியானது.

5. ஆக்கங்கள் ஜூலை மாதம் 31 -ம் தேதிக்குள் கிடைக்கவேண்டும்

6. ஆக்கங்களைத் திருப்பி அனுப்ப இயலாது. தபால் தலைகள் அனுப்ப வேண்டாம்.

7.பரிசு பெறும் நாவல்கள்/ கட்டுரைகள் முழுமையாகவோ/ பகுதியாகவோ நர்கிஸில்
தொடர் கதைகளாக/ கட்டுரைகளாக  வெளிவரும்; அவற்றை நர்கிஸில் வெளிவரும் வரை
வேறு வகையில் பிரசுரிக்கக் கூடாது.

8.பரிசீலனை முடிந்த பிறகு நர்கிஸ் இதழில் முடிவு அறிவிக்கப்படும்;
அதைத்தொடர்ந்து பரிசுபெற்றவர்களுக்கும் பதிவுத் தபால் / கூரியர் சர்வீஸ்
மூலம் தெரிவிக்கப்படும். அதனுடன் பரிசுத்தொகையும் காசோலை மூலம்
அனுப்பிவைக்கப்படும்.

 9.கட்டுரைகள்/ நாவல்கள் நர்கிஸ் முகவரிக்கு ( 54, மரியம் நகர்,
மல்லிகைபுரம், திருச்சி- 620001, தமிழ்நாடு, இந்தியா) அனுப்பப் பட
வேண்டும் ; கடித உறையின்மீது கட்டுரை/ நாவல் என்று தெளிவாகக்
குறிப்பிடவேண்டும்

10.ஒருவரே இரண்டு போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம்; ஒன்றுக்கு மேற்பட்ட
ஆக்கங்களையும் அனுப்பலாம்.

எம். அனீஸ் பாத்திமா
பதிப்பாளர்/நிர்வாக ஆசிரியை
நர்கிஸ்
திருச்சி -620001

டாக்டர் அ. சையத் இப்ராஹீம்
     (ஹிமானா சையத்)
கௌரவ ஆசிரியர் : நர்கிஸ்
நிறுவனர்:மல்லாரி பதிப்பகம்
 சித்தார்கோட்டை-623513
————————

நன்றி:imantimes@googlegroups.com


குவைத் ”தமிழ் முஸ்லிம் குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சி”

ஏப்ரல் 23, 2008

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

 

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் தமிழ் முஸ்லிம் குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சிமற்றும் குவைத் மீலாது (ஹிஜ்ரி 1429) மாநாடு ஒலி / ஒளிப்பேழைகள் வெளியீடு

 

                பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம…

           

            இன்ஷா அல்லாஹ் வருகின்ற 24-04-2008 வியாழக்கிழமை மாலை 6:30 மணி இரவு 9:30 மணி வரை குவைத், சுர்ரா பகுதியில் உள்ள சங்கத்தின் துணைச்செயலாளர் அல்ஹாஜ் எம். முனீர் அஹ்மத் அவர்களின் இல்லத்தில் (கத்ஆ : 3, ஷாரா : 6, வீட்டு எண் : 23, தொலைபேசி : 6633054) குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-tic) ஏற்பாடு செய்யும் தமிழ் முஸ்லிம் குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சிமற்றும் குவைத் மீலாது (ஹிஜ்ரி 1429) மாநாடு ஒலி / ஒளிப்பேழைகள் வெளியீடுநிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.

            சங்கத்தின் தலைவர் மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்ஷைக் அப்துல் லத்தீஃப் காஸிமி ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் சங்கத்தின் உலமாக்கள் குழு உறுப்பினர் மவ்லவீ காரீ அஷ்ஷைக் எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ ஹழ்ரத் அவர்களும், சங்கத்தின் தலைமை நிலைய சொற்பொழிவாளர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அஷ்ஷைக் ஏ. முஹம்மது அலீ ரஷாதி ஹழ்ரத் அவர்களும், சங்கத்தின் துணைச்செயலாளர் அல்ஹாஜ் எம். முனீர் அஹ்மத் M.A., அவர்களும் சிறப்புரையாற்றுகின்றனர்.

            சங்கம் ஆரம்பிக்கப்பட்டதின் நோக்கம், அதன் செயற்பாடுகள், கடந்து வந்த பாதை, எதிர்கால திட்டங்கள் போன்றவற்றை சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா அஷ்ஷைக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A., அவர்கள் எடுத்துரைக்கின்றார்.

            கடந்த மார்ச் (200 8) மாதம் சங்கம் செய்த மாபெரும் ஸீறத்(மீலா)துன் நபி சிறப்பு மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து வருகை தந்த சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் மஜ்லிஸ் மதாரிஸுல் அரபிய்யா என்ற தமிழக அரபிக்கல்லூரிகளின் கூட்டமைப்பின் தலைவர், நீடுர் நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக்கல்லூரியின் முனனாள் முதல்வர், சென்னை மந்தைவெளி பெரிய பள்ளிவாசலின் முன்னாள் தலைமை இமாம், வீரசோழன் கைராத்துல் இஸ்லாம் அரபிக்கல்லூரியின் இன்னாள் முதல்வர், நாடறிந்த நாவலர், எழுத்தாளர், நூலாசிரியர் மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்ஷைக் ஓ.எம். அப்துல் காதிர் பாகவீ ஹழ்ரத் கிப்லா அவர்கள் மீலாது மற்றும் குவைத் நாட்டின் பல பகுதிகளில் நிகழ்த்திய தொடர் சொற்பொழிவுகளின் அடங்கிய ஒலி / ஒளிப்பேழைகள் இந்நிகழ்ச்சியில் வெளியிடப்படவுள்ளன.   

            இச்சிறப்பு மிகு நிகழ்ச்சியில் குவைத் வாழ் இந்திய, இலங்கையைச் சார்ந்த தமிழ் இஸ்லாமியர்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று பயனடையுமாறும், பெண்களுக்கு தனியிட வசதியும், விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளதாகவும் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செயது கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

            மேலதிக செய்திகளுக்கும், சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கும் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.K-Tic.com என்ற இணையதளத்தை பார்வையி டுமாறும், தங்களின் மேலான கருத்துக்கள், ஆலோசனைகளை q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறும், உடனுக்குடன் தகவல்கள் தங்களின் மின்னஞ்சல்களுக்கு வந்து சேர http: //groups.yahoo.com/group/K-Tic-group  என்ற யாஹு குழுமத்தின் தங்களை இணைத்துக் கொள்ளுமாறும் சங்க செய்திக்குறிப்பு அழைப்பு விடுக்கின்றது. நன்றி. வஸ்ஸலாம்.                                  

 

செய்தி :    

தகவல் தொடர்பு பிரிவு,

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)

இணையதளம்         : www.K-Tic.com

மின்னஞ்சல்                         : q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com

யாஹூ குழுமம்   : http://groups.yahoo.com/group/K-Tic-group

 

குறிப்பு :

இந்தச் செய்தியை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்… குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

நன்றி: Kuwait Tamil Islamic Committee


இருதய அறுவை சிகிச்சை இலவசமாக

ஏப்ரல் 22, 2008

 இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் உள்ள குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு செலவு செய்ய சக்தியற்ற ஏழைப் பெற்றோருக்கு உதிவிட பெங்கலூரில் உள்ள நிறுவனம் உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளது. இந்நிலையில் உள்ளவாகளுக்கு இச்செய்தியை தெரிவித்து பிஞ்சுக் குழந்தைகளைக் காப்பாற்ற நாமும் உதவலாமே!

நன்றி: ரியாத் தமிழ்ச் சங்கம்


நபியை நேசிக்கும் 40 இலட்சம் முஸ்லிம்கள் தேவை

ஏப்ரல் 21, 2008
Assalamu alikum
 
One of the known websites ( called Paltalke) of chatting rooms, has establishe ( by some individuals some chat rooms )  to be used to abuse our beloved Prophet peace be upon him, by putting funny photos and other things about him.
Then some Muslims who uses this web have observed it and have complained to the administration about it, but their respond was : they need to get 4 Million Muslims’ signatures in order  to stop those chat rooms.
As if they want to challenge Muslims ,,,,,so my dear BROTHER AND SISTERS let us show them we can make it, just simply sing into this link
And put you signature,    the number of signatures so far is : 1950253
 
and please don’t let it stop there,, forward it to all you know ,
 
Our motto:  
 
“WE LOVE OUR MESSENGER MUHAMED PEASE BE UPON HIM”
 

 

 நன்றி : முதுவை ஹிதாயத்